மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வீழ்ச்சி

February 25, 2025

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 856.65 புள்ளிகள் சரிந்து, 74,454.41 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் சென்செக்ஸ் 75,311.06 புள்ளிகளுடன் துவங்கி, நேற்று காலை 74,893.45 புள்ளிகளில் தொடங்கி, சற்று ஏற்றம்-இறக்கம் ஆகி, இறுதியில் 74,454.41 புள்ளிகளுடன் முடிவடைந்தது. மேலும் நேற்று அதிகபட்சமாக 74,907.04 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 74,387.44 புள்ளிகளையும் […]

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 856.65 புள்ளிகள் சரிந்து, 74,454.41 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் சென்செக்ஸ் 75,311.06 புள்ளிகளுடன் துவங்கி, நேற்று காலை 74,893.45 புள்ளிகளில் தொடங்கி, சற்று ஏற்றம்-இறக்கம் ஆகி, இறுதியில் 74,454.41 புள்ளிகளுடன் முடிவடைந்தது. மேலும் நேற்று அதிகபட்சமாக 74,907.04 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 74,387.44 புள்ளிகளையும் எட்டியது.

இந்திய பங்குச் சந்தையின் நிஃப்டி நேற்றும் சரிவுடன் தொடங்கி, இறுதியாக 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் வர்த்தகத்தில் நிஃப்டி 22,795.90 புள்ளிகளுடன் நிறைவடைந்திருந்தது. நேற்று காலை 188.4 புள்ளிகள் சரிந்து 22,607.50 புள்ளிகளில் தொடங்கி, அதிகபட்சமாக 22,668.05 புள்ளிகள் மற்றும் குறைந்தபட்சமாக 22,518.80 புள்ளிகள் வரை சென்றது.

பங்குகளின் நிலவரம் பற்றி கூறவிருந்தால், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
இதேபோல், ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா & மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா பங்குகள் ஏற்றம் கண்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu