இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மீண்டும் நடைபெற்ற மோதலில் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் நகரங்கள் மீது டஜன் கணக்கான ராக்கெட்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை தொடுத்தது. அண்டை நாடான லெபனானிலும் ஹமாஸ் போராளிகள் இருப்பதால் அங்கும் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின.
இதனால் காசா நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தெரியவில்லை. இதனிடையே இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.














