தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.

September 21, 2022

தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்டோபர் 20-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. அக்டோபர் 21-ம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் […]

தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்டோபர் 20-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. அக்டோபர் 21-ம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

முன்பதிவு செய்ய அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

தசரா திருவிழாவையொட்டி அக்டோபர் 1 முதல் 10 வரை சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் கோவையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 9

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu