மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கினர். இந்த ஜோடி மோனக்கோவின் ஹுகோ நிஸ் - போலந்தின் ஜியேலின்ஷ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில்
போபண்ணா ஜோடி 7-5,7-6(3) என்று வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது. கால் இறுதி சுற்றில் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக், நெதர்லாந்தின் செம் வீர்பீக் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.