ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது. ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ் ஏவுகணையும் உள்நாட்டு உற்பத்தியாகும். தற்சார்பு இந்தியா திட்டத்துக்கும், கடற்படையின் வலிமையை காட்டுவதற்கும், இந்த கப்பலும், ஏவுகணையும் உதாரணமாக உள்ளது. மேலும் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை […]

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது. ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ் ஏவுகணையும் உள்நாட்டு உற்பத்தியாகும். தற்சார்பு இந்தியா திட்டத்துக்கும், கடற்படையின் வலிமையை காட்டுவதற்கும், இந்த கப்பலும், ஏவுகணையும் உதாரணமாக உள்ளது.

மேலும் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu