பிரேசிலியாவில் உச்சநீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
பிரேசிலியாவின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் நேற்று இரவு ஒரு கார் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயம் அடையவில்லை. ஆனால் தாக்குதல் மேற்கொண்ட நபர் உயிரிழந்தார். அவர் கார் குண்டை வெடிக்கச் செய்தபோது பலியானதாக தெரிகிறது. இந்த தாக்குதல் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியாது. போலீசார் மற்றும் மீட்பு படையினர், நீதிபதிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த தாக்குதல் ஜி-20 மாநாட்டுக்கு முன்னதாக பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த நபர் பிரான்சிஸ்கோ வாண்டர்லே லூயிஸ், போல்சனாரோவின் ஆதரவாளராக இருந்தார். அவர் முன்பு லூலா ஆட்சி மீண்டும் நடைபெறுவதை எதிர்த்து கிளர்ச்சி நிகழ்த்தியவராக இருந்தார்.














