உலக அளவில் சோளம் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, உலகின் முதல் சோளம் ஏற்றுமதியாளராக பிரேசில் மாறவுள்ளது. கிட்டத்தட்ட 50 மில்லியன் டன் அளவிலான சோளம், பிரேசிலில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளான்துறையில் பிரேசில் நாடு ஏற்கனவே முன்னணியில் உள்ளது. அந்த வகையில், பிரேசிலுக்கு மற்றும் ஒரு மைல் கல்லாக, சோளம் ஏற்றுமதி அமைய உள்ளது. நடப்பு ஆண்டில், அமெரிக்காவின் சோளம் ஏற்றுமதி 41.3 மில்லியன் டன் அளவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், பிரேசில் 56 மில்லியன் டன் சோளம் ஏற்றுமதிக்கு திட்டமிட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா தொடர்ந்து உலகின் முதல் சோளம் உற்பத்தியாளராக நீடிக்கிறது. பிரேசில் நாட்டின் சோளம் உற்பத்தி 131.9 மில்லியன் ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதை விட இரட்டிப்பாக, 348.8 மில்லியன் டன் அளவில் சோளம் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், ஏற்றுமதி மதிப்பில் பிரேசில் முதலிடம் பிடித்து வரலாறு படைக்க உள்ளது.