அக்டோபர் 24ம் தேதி முதல் தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதை போல் தெலுங்கானா மாநிலத்திலும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி முதல் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறது. இந்த திட்டத்திற்கு ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.














