அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1-5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 2023-2024-ம் நிதியாண்டு முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.