நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் லொபுசே பகுதியில் வடக்கே 93 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, சீனா எல்லை அருகிலுள்ள சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது.பல கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் நேபாளத்தின் உட்பகுதிகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் டெல்லி மற்றும் பீகார் போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இது பிரம்மாண்டமான அதிர்வுகளைக் கொடுத்துள்ள நிலையில், மேலும் சேதம் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை.