ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முதல் முறையாக IVF முறையில் கங்காரு கருக்கலை உருவாக்கி, உயிரின பாதுகாப்பில் புதிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI) முறையை பயன்படுத்தி 20 க்கும் அதிகமான கிழக்கு சாம்பல் கங்காரு கருக்கல்களை உருவாக்கினர். உயிரியல் மருத்துவமனைகளில் இறந்த கங்காருக்களிலிருந்து விந்தணுக்கள் மற்றும் கருவணுக்கள் சேகரிக்கப்பட்டன.
முன்னணி ஆய்வாளர் டாக்டர் ஆண்ட்ரஸ் கம்பினி, இதன் மூலம் கோலாக்கள், தஸ்மேனியன் டெவில்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார். ICSI முறைக்கு மிகக் குறைவான உயிருள்ள விந்தணுக்கள் மட்டுமே தேவையானதால், குறைந்த இனப்பெருக்க திறன் கொண்ட உயிரினங்களுக்கு இது பயனளிக்கக்கூடும். தற்போது இந்த கருக்கல்களை வளர்ப்பதற்கான திட்டம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதே ஆய்வுக்குழுவின் குறிக்கோளாக உள்ளது.