பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு இடைக்கால ஜாமீன்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்களின் விளைவாக, பிரிஜ் பூஷன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவுகள் 354 354 ஏ, 354 டி, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரிட்ஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தில்லி நீதிமன்றத்தில் பிரிஜ் […]

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்களின் விளைவாக, பிரிஜ் பூஷன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவுகள் 354 354 ஏ, 354 டி, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரிட்ஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தில்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலர் வினோத் தோமர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். மேலும், பிரிஜ் பூஷன் தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதன்படி, 25000 ரூபாய் பிணைத்தொகை செலுத்தி இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu