பிரிட்டனில் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் 80% உயர்வு

August 30, 2022

ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணத் தொகை 80 சதவீதம் உயர்ந்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் போன்றவற்றை முதன்மையாக இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மிகவும் […]

ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணத் தொகை 80 சதவீதம் உயர்ந்துள்ளது.

உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கிய நாளில் இருந்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் போன்றவற்றை முதன்மையாக இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, இங்கிலாந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இயற்கை எரிவாயுவிற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பு, மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை 80% உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 1.85 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி வருபவர்கள், சுமார் 3.33லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த நேரிடும். இதனால், அந்நாட்டில் வசிக்கும் 84% மக்கள் நேரடி பாதிப்புக்கு ஆளாவர் என்று கூறப்படுகிறது. பலரும் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவர் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுமார் 73% இயற்கை எரிவாயு உபயோகிக்கும் இங்கிலாந்தில், தற்போது, அணு சக்தி, சூரிய சக்தி, நீர்மின் சக்தி மூலம் 30 சதவீதமும், கழிவுகளில் இருந்து 10 சதவீதமும் நிலக்கரி மூலம் ஒரு சதவீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எரிவாயு தட்டுப்பாடின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களின் நுகர்வுத் தன்மையும் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மளிகை பொருட்களின் விற்பனை 4.1%, இறைச்சி, மீன்களின் விற்பனை 9.4% குறைந்துள்ளது. இதனால், சுமார் 13 லட்சம் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சி குறித்து இங்கிலாந்தின் பிரதமர் விளக்கமளித்தும், அதனைப் பொருட்படுத்தாது, மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu