வெப்பமண்டல பவளப் பாறைகள் கொண்ட டியாகோ கார்சியா தீவை உள்ளடக்கிய சாகோஸ் தீவுக்கூட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மோரீஷஸிடம் ஒப்படைக்க இங்கிலாந்து வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ-பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் விதமாக, சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸுக்கு வழங்குவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்தியாவின் சமாதானப் பேச்சு பங்களிப்பு முக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம், மோரீஷஸின் இறையாண்மைக்கு ஆதரவு அளிக்க இந்தியா தொடர்ந்து நின்றிருக்கின்றது என அறிவித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்காவின் ஆதரவுடன், டியாகோ கார்சியா தீவில் தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.














