சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

October 4, 2024

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தொழிலதிபர்களிடமிருந்து சுமார் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் (ரூ. 2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்றது காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன், 2015-2018 வரை வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக, 2021 மே மாதம் போக்குவரத்துத் […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொழிலதிபர்களிடமிருந்து சுமார் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் (ரூ. 2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்றது காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன், 2015-2018 வரை வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக, 2021 மே மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2015 முதல் 2022 வரை இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் மதிப்புமிக்க பரிசுகள் பெற்றதாக கூறப்படுவதால், அரசு ஒப்பந்தங்களில் உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக பெற்றது, நீதியைத் தடுத்தது உள்ளிட்ட 4 குற்றங்களில் ஒப்புக்கொண்டார். இருதரப்பு வாதங்களின் முடிவில், நீதிபதி வின்சென்ட் ஹூங் பரிசுப் பொருட்களைப் பெறுவதற்கு ஈஸ்வரன் தனது அமைச்சா் பொறுப்பை பயன்படுத்தியதை உறுதியாகக் கூறினார். மேலும் ஈஸ்வரனுக்கு 12 மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றாா்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu