பிரிட்டனின் ராணி எலிசபெத் பால்மோரல் அரண்மணையில் புதிய பிரதமரை நியமிக்க உள்ளார்.

September 1, 2022

எலிசபெத் மகாராணி பிரிட்டனின் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளார். அந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள பாரம்பரியமான பக்கிங்ஹாம் அரண்மனையில் அல்லாமல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் நடைபெறும் என அரண்மனை செய்தித் தொடர்பாளர் ௯றியுள்ளாா். விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் இருந்து ஒவ்வொரு பிரிட்டிஷ் தலைவரும் பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே பதவியேற்பார்கள். இந்நிலையில் எபிசோடிக் மொபிலிட்டி எனும் நடமாட்ட பிரச்சனை காரணமாக எலிசபெத் மகாராணி பிரிட்டனின் புதிய பிரதமரை பால்மோரல் அரண்மனையில் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பிரதம௫க்கான தேர்தலில் கன்சர்வேடிவ் […]

எலிசபெத் மகாராணி பிரிட்டனின் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளார். அந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள பாரம்பரியமான பக்கிங்ஹாம் அரண்மனையில் அல்லாமல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் நடைபெறும் என அரண்மனை செய்தித் தொடர்பாளர் ௯றியுள்ளாா்.

விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் இருந்து ஒவ்வொரு பிரிட்டிஷ் தலைவரும் பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே பதவியேற்பார்கள். இந்நிலையில் எபிசோடிக் மொபிலிட்டி எனும் நடமாட்ட பிரச்சனை காரணமாக எலிசபெத் மகாராணி பிரிட்டனின் புதிய பிரதமரை பால்மோரல் அரண்மனையில் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய பிரதம௫க்கான தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் போட்டி முடிவு செப்டம்பர் 5 அன்று அறிவிக்கப்படும். அச்சமயம் எலிசபெத் மகாராணி பார்வையாளர்கள் மத்தியில் புதிய பிரதமரை அறிவிப்பார் என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் ௯றினார். அத்துடன் தற்போதைய பிரதமரான போரிஸ் ஜான்சனையும் அவரது வாரிசையும் செப்டம்பர் 6 ஆம் தேதி பால்மோரலில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu