பிரிட்டானியா நிறுவனத்தின் பங்குகள் 10% உயர்வு

November 9, 2022

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா, கடந்த காலாண்டில் 28.4% லாப உயர்வை பதிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. நிறுவனத்தின் லாபம் 4.93 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இது, வல்லுனர்கள் கணித்த நிறுவனத்தின் லாபத்தை விட உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் வருவாய் 21.4% உயர்ந்து, 43.8 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டு, இது 36.07 பில்லியன் ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, திங்கட்கிழமை அன்று, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்தது. […]

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா, கடந்த காலாண்டில் 28.4% லாப உயர்வை பதிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. நிறுவனத்தின் லாபம் 4.93 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இது, வல்லுனர்கள் கணித்த நிறுவனத்தின் லாபத்தை விட உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் வருவாய் 21.4% உயர்ந்து, 43.8 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டு, இது 36.07 பில்லியன் ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, திங்கட்கிழமை அன்று, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்தது. குறிப்பாக, தேசிய பங்குச் சந்தையில் பிரிட்டானியா நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் இருந்தன.

பிரிட்டானியா நிறுவனத்தின் வளர்ச்சி பதிவாகியுள்ள அதே நேரத்தில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமும் லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால், டாபர் நிறுவனம், மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால், இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu