உணவுச் சந்தையில் பிரபலமாக உள்ள பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 9.4% அளவுக்கு பிரிட்டானியா பங்குகள் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் பிரிட்டானியா நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 5193.6 ரூபாயாக உள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர லாபத்தில் 3.6% சரிவு பதிவாகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர லாபம் 538.3 கோடி ஆகும். மேலும், நிறுவனத்தின் வருவாய் 4.2% சரிந்து 4126.7 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 ஆம் நிதி ஆண்டுக்கு பிரிட்டானியா நிறுவனத்தின் வருவாய் 16546 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.5% உயர்வாகும். மேலும், 2024 ஆம் நிதி ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 10.1% உயர்வில் லாபம் பதிவாகியுள்ளது.