பாஸ்போர்ட் இல்லா பயணம் - புதிய தொழில்நுட்ப பரிசோதனையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

November 19, 2022

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பிற நாடுகளுக்கு பயணம் செல்ல வசதியாக புதிய தொழில்நுட்பம் ஒன்றை பரிசோதித்துள்ளது. இதில், பயோமெட்ரிக் தொழில்நுட்பம் மூலம் பயணிகளின் தரவுகள் சரி பார்க்கப்படுகின்றன. முதற்கட்டமாக, லண்டன் விமான நிலையத்தில் உள்ள ஐந்தாம் முனையத்தில், சர்வதேச விமானப் பயணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டது. முதலில், பயணிகளின் முக அமைப்பு ஸ்கேன் செய்யப்படும். பின்னர், அவற்றுடன் சேர்த்து, பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகிய விவரங்களை தங்களது கைபேசியில் காண்பித்து, […]

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பிற நாடுகளுக்கு பயணம் செல்ல வசதியாக புதிய தொழில்நுட்பம் ஒன்றை பரிசோதித்துள்ளது. இதில், பயோமெட்ரிக் தொழில்நுட்பம் மூலம் பயணிகளின் தரவுகள் சரி பார்க்கப்படுகின்றன. முதற்கட்டமாக, லண்டன் விமான நிலையத்தில் உள்ள ஐந்தாம் முனையத்தில், சர்வதேச விமானப் பயணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டது.

முதலில், பயணிகளின் முக அமைப்பு ஸ்கேன் செய்யப்படும். பின்னர், அவற்றுடன் சேர்த்து, பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகிய விவரங்களை தங்களது கைபேசியில் காண்பித்து, பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கலாம். பாஸ்போர்ட்டை கையில் எடுத்து வர தேவையில்லை. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கருவி மூலம், மூன்று வினாடிகளில் பயணிகள் விவரங்கள் சரிபார்க்கப்படும். முன்னதாக, பயணிகளின் பயோமெட்ரிக் விவரங்கள் வீட்டிற்கு வந்து பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu