பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. . ஸ்காட்லாந்திலிருந்து லண்டனில் உள்ள பகிங்ஹாம் அரண்மனையில் இரு நாட்கள் வரை ராணியின் உடல் வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் என 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.