இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயல்லா ப்ராவர்மேன், பிரிட்டன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவர் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சுயல்லா ப்ராவர்மேன் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் க்ளவர்லி நியமிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயல்லா ப்ராவர்மேன் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளில் சிக்கி வந்ததை அடுத்து, அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதன்படி அவரது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த நிலையில், அண்மையில், காசா போர் தொடர்பான போராட்டங்கள் லண்டனில் நடைபெற்ற போது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் பாரபட்சம் காட்டியதாக அவர் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.