இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தையாக மும்பை பங்குச் சந்தை விளங்குகிறது. இதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு சுந்தரராமன் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இவர் தலைமை பதவியை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது நியமனத்திற்கு இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், மும்பை பங்குச் சந்தையின் உயர் பதவியை வகித்து வந்த ஆஷிஷ் குமார் சவுகான், தேசிய பங்கு சந்தையில் இணைந்ததால், மும்பை பங்குச் சந்தையின் தலைமை பொறுப்பு காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், தேசிய பங்குச் சந்தையில் 20 வருடங்களாக பணியாற்றி வந்த சுந்தரராமன் ராமமூர்த்தி தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரது நியமனம் தொடர்பாக, வரும் ஜனவரி 16ஆம் தேதி, பங்குதாரர்களின் ஒப்புதல்கள் தபால் ஓட்டுகள் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














