இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி சரிவில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 335 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 17800 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் 10% சரிவை சந்தித்துள்ளது. கிளாண்ட் ஃபார்மா பங்குகள் 3% சரிவை சந்தித்துள்ளது. அத்துடன், இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இன்றைய வர்த்தகத்தில் மிகவும் சரிவை சந்தித்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், ஐடிசி, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. ஏர்டெல், எச்டிஎப்சி, சன் பார்மா, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், மாருதி நிறுவன பங்குகள் சர்வை சந்தித்துள்ளன.