இந்திய பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் 1.5% க்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், பங்குச் சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. உலகளாவிய சந்தை நிலவரம் சாதகமான சூழலில் உள்ளதால் இந்த ஏற்றம் பதிவாகியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளின் நிறைவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 82962.71 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 25388.9 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. அதானி பவர், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டிசிஎஸ், ஜொமாட்டோ, ஹெச் டி எஃப் சி வங்கி, வோடபோன் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. ஹொனாசா கன்ஸ்யூமர், ரேமண்ட், சுஸ்லான் எனர்ஜி உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.