பங்குச் சந்தையில் தொடர் சரிவு - சென்செக்ஸ் 344 புள்ளிகள் வீழ்ச்சி

March 15, 2023

இந்திய பங்குச் சந்தையில், தொடர்ச்சியாக 5 நாட்களாக சரிவு நிலை காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 344.29 புள்ளிகள் சரிந்து 57555.9 புள்ளிகளில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 71.15 புள்ளிகள் சரிந்து, 16972.15 ஆக பதிவாகியுள்ளது. நிஃப்டி குறியீடுகள் 17 ஆயிரத்துக்கும் கீழ் மீண்டும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழுமம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முக்கியமாக, அதானி […]

இந்திய பங்குச் சந்தையில், தொடர்ச்சியாக 5 நாட்களாக சரிவு நிலை காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 344.29 புள்ளிகள் சரிந்து 57555.9 புள்ளிகளில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 71.15 புள்ளிகள் சரிந்து, 16972.15 ஆக பதிவாகியுள்ளது. நிஃப்டி குறியீடுகள் 17 ஆயிரத்துக்கும் கீழ் மீண்டும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழுமம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முக்கியமாக, அதானி எண்டர்பிரைசஸ் 5.8% உயர்வையும், அதானி போர்ட்ஸ் 3.8% உயர்வையும் பதிவு செய்துள்ளன. இது தவிர, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன், எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் உயர்வை பதிவு செய்துள்ளன.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.96% இழப்பை இன்று பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் தவிர, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வாங்கி, மாருதி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவையும் சரிவை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu