ஐடி பங்குகள் உயர்வால் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், வர்த்தக நேர முடிவில், உச்சத்தை விட சற்று சரிந்து நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 81785.56 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 25052.35 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ், டிசிஎஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், வோடபோன், எஸ் வங்கி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஜீ என்டர்டெயின்மென்ட், ரிலையன்ஸ், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐ டி சி, அதானி பவர் போன்ற நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.