ஆகஸ்ட் மாதத்தில் 4ஜி சேவைகளை தொடங்குவதாக பிஎஸ்என்எல் அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 4ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு கீழ் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை தொடங்கியுள்ள காலகட்டத்தில், பிஎஸ்என்எல் தற்போது தான் 4ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தி […]

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 4ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு கீழ் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை தொடங்கியுள்ள காலகட்டத்தில், பிஎஸ்என்எல் தற்போது தான் 4ஜி சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், 4ஜி சேவைகள் தொடங்கப்படுவது சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu