பி.எஸ்.என்.எல். புதிய லோகோ மற்றும் ஏழு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய லோகோ ஆரஞ்சு நிறத்தில் அறிமுகமாகியுள்ளது. மேலும் "கனெக்டிங் இந்தியா" வாக்கியம் நீக்கப்பட்டு, "கனெக்டிங் பாரத்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய லோகோவுடன், ஸ்பேம்-இல்லா நெட்வொர்க், வைபை ரோமிங் சேவை மற்றும் பல புதிய சேவைகள் கூட சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு 500 நேரலை டிவி சேனல்கள் மற்றும் FTTH பயனர்களுக்கு பே டிவி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். சி-டி.ஏ.சி. உடன் 5ஜி நெட்வொர்க் சேவைகளும் வழங்க உள்ளது. இதன் மூலம், தொழில்நுட்ப மேம்பாடு நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.