2024ல் பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவையை துவங்கும்

January 6, 2023

2024ல் பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவையை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் 'ஜியோ' உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில் 5ஜி சேவை நேற்று துவங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஒடிசாவில் புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில் 5ஜி சேவை துவங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒடிசா மாநிலம் முழுதும் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார். இம்மாநிலத்தில் தொலைதொடர்பு சேவையை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசு […]

2024ல் பி.எஸ்.என்.எல்., 5ஜி சேவையை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 'ஜியோ' உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில் 5ஜி சேவை நேற்று துவங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஒடிசாவில் புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில் 5ஜி சேவை துவங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒடிசா மாநிலம் முழுதும் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார்.

இம்மாநிலத்தில் தொலைதொடர்பு சேவையை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசு 5,600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் அடுத்தாண்டில் 5ஜி சேவை துவங்கப்படும். இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu