நிகழாண்டில் நாசாவின் நிலவு திட்டத்தில் பிடிஎஸ் இசைக்குழுவினரின் பாடல்கள் ஒலிக்கப்பட உள்ளன. இது உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பிடிஎஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அப்போலோ 11 திட்டத்தின் 50 வது நினைவு ஆண்டை கொண்டாடும் வகையில், பல்வேறு பாடல்கள் அடங்கிய தொகுப்பை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. அதன் பகுதியாக, பிடிஎஸ் இசைக்குழுவினரின் 3 பாடல்கள் நாசாவின் 2024 நிலவுத் திட்டத்தில் ஒலிக்கச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்சைல்ட் (MoonChild) என்ற ஆர் எம் (RM) - ன் தனிப்பட்ட பாடல் ஒன்றாகும். அதன்படி, விண்வெளியில் ஒலிக்கப் போகும் முதல் தென் கொரிய பாடகர் என்ற பெருமையை ஆர் எம் பெறுகிறார்.