நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்துக்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தின் மீதான இன்டெக்ஸேஷன் சலுகை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறுகிய காலத்துக்கான கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மேலும், எல்டிசிஜி நிலையாக 12.5% அளவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், சொத்து மதிப்பை இன்றைய பணவீக்கத்துக்கு ஏற்ப கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்தும் முறை இனிமேல் பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுகிறது.