தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

February 19, 2024

சட்டசபையில் இன்று 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையின் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் கவர்னர் ஆர். என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். அதனை தொடர்ந்து சபாநாயகர் உரையை தமிழில் வாசித்தது அவை குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதியிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் […]

சட்டசபையில் இன்று 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபையின் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் கவர்னர் ஆர். என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். அதனை தொடர்ந்து சபாநாயகர் உரையை தமிழில் வாசித்தது அவை குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதியிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் சட்டசபையில் 15ஆம் தேதி உரையாற்றினார். இந்நிலையில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுகள் அறிவிப்பில் சலுகைகள் கூடுதலாக இடம்பெறும். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பட்ஜெட் தாக்கல் செயல்படுவதால் அதிக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழக பட்ஜெட் 7 மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நிதி துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் நாளை 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் வேளாண் தொடர்பான புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu