பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிப்பு

February 7, 2024

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தின் மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் […]

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதியுடன்
முடிவடைய உள்ளது.

கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தின் மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். பின்னர் நாளை மறுநாள் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி 2014 ஆம் ஆண்டின் இந்திய பொருளாதாரம் மோடி தலைமையிலான பாஜக அமைந்த பின் 2014 பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இதனால் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு பத்தாம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu