புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்பு அந்த நடைமுறை மாறியது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபை கூடுகிறது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது.