மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லெட் ரெயில் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முதல் புல்லெட் ரெயில் திட்டம், மும்பை மற்றும் அகமதாபாத் இடையே கட்டப்படுகின்றது. இந்த ரெயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும், மேலும் 508 கிமீ தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும். இந்நிலையில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் மூன்று தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.