இண்டிகோ விமான நிறுவனம் விசா விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. எனவே, குடிவரவு பணியகம் - பியூரோ ஆப் இமிகிரேஷன், இண்டிகோ நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஜூன் 11ஆம் தேதி, குடிவரவு பணியகத்திடம் இருந்து அபராதம் தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவலை இண்டிகோ தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்ட காரணத்தால், பங்குச்சந்தை அறிக்கையில் இதைப் பற்றி குறிப்பிடுவதற்கு தாமதம் ஏற்பட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.