மும்பையில் பேருந்து விபத்து காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், குர்லா பகுதியிலிருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் உயிரிழந்தும், 43க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.