உத்திரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் உன்னாம் பகுதியில் இன்று அதிகாலையில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயம் அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.