தென் ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்து - 45 பேர் பலி

March 30, 2024

தென்னாப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகி உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் மொகொபானே நகருக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்து கொண்டிருந்தது. அது அப்போது ஒரு பாலத்தை கடந்த போது தவறி பள்ளத்தில் விழுந்தது. பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததனால் அது பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 164 அடி பள்ளத்தில் அந்த பேருந்து விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த […]

தென்னாப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகி உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் மொகொபானே நகருக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்து கொண்டிருந்தது. அது அப்போது ஒரு பாலத்தை கடந்த போது தவறி பள்ளத்தில் விழுந்தது. பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததனால் அது பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 164 அடி பள்ளத்தில் அந்த பேருந்து விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த பேருந்தில் தீ பிடித்தது. இந்த விபத்தில் அந்த பேருந்தில் இருந்த 45 பேரும் பலியாகினர். ஒரு குழந்தை மட்டும் உயிருடன் மீட்க முடிந்தது. இந்த விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். சிலர் பேருந்துக்குள் சிக்கி உள்ளதாகவும், சிலருடைய உடல் பேருந்து கீழே விழும்போது பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு எட்டு வயதாகிறது என்ற தகவலை தவிர வேற எதையும் அதிகாரிகள் கூறவில்லை.போர்ட்ஸ்வானா பகுதியில் இருந்து ஈஸ்டர் பண்டிகைக்காக இந்த பேருந்து சென்று இருக்கலாம் என்று அதிபர் சீரியல் ராமபோசா கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu