தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே முன்பதிவு செய்யப்பட்டு வரும்.
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பண்டிகைகளின் போது பயணம் செய்வதற்காக ஒரு மாத காலத்திற்கு முன்பு முன் பதிவு செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபடும். இந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் உள்ளன. இதன் காரணமாக பொங்கலுக்கு முந்தைய வார இறுதியில் பயணம் செய்ய விரும்புவோர் ஜனவரி 12-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதேபோன்று போகிப் பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ஆம் தேதி சொந்த ஊர் செல்லும் பயணிகள் நாளை நேரிலும் டிஎன்எஸ்டிசி வலைத்தளத்திலும் அல்லது செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.