தமிழக - ஆந்திர மாநிலத்திற்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

September 9, 2023

சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர்,விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மேலும் தமிழக- ஆந்திர மாநிலத்திற்கு இடையேயான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை முதல் […]

சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர்,விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மேலும் தமிழக- ஆந்திர மாநிலத்திற்கு இடையேயான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் தமிழக எல்லை ஆரம்பாக்கம் வரை 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து புறப்பட்டு மாதவரத்திற்க்கு திரும்பி வருகிறது.ஆந்திர மாநிலத்திற்குள் செல்லவில்லை.

ஆந்திராவில் மாதவரத்தில் இருந்து 140 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை சரியாகும் வரை இந்த நிலை நீடிக்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu