ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசக்கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி வருகின்றனர்.
இதனை தடுக்க ஆங்காங்கே பஸ் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தமிழகத்தில்
இருந்து ஆந்திரா செல்லும் வாகனம் மற்றும் பிற வாகனங்கள் ஆந்திர மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம், திருப்பதி, செல்லும் 60க்கும் மேற்பட்ட பஸ்கள் காளி கோவில் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது.