நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம்

February 21, 2023

நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்பிரமணியத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே, இந்த பதவியில் உள்ள பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக செல்ல இருப்பதை முன்னிட்டு, இவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக, நேற்று, அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிவிஆர் சுப்பிரமணியம், நிதித்துறை சார்ந்த மத்திய அரசு பணியில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளராக இருந்து வந்தவர். அத்துடன், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த […]

நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்பிரமணியத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே, இந்த பதவியில் உள்ள பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக செல்ல இருப்பதை முன்னிட்டு, இவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக, நேற்று, அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிவிஆர் சுப்பிரமணியம், நிதித்துறை சார்ந்த மத்திய அரசு பணியில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளராக இருந்து வந்தவர். அத்துடன், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததில் இவரது பங்கு முக்கியமாக அமைந்தது. மேலும், இவர் 1987 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அத்துடன், கடந்த 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை, மன்மோகன் சிங்கின் தனி செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிவிஆர் சுப்ரமணியம், உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார். அவர் உலக வங்கியில் பணியாற்றிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu