பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் கோயல் மீண்டும் வேதாந்தா நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
வேதாந்தா நிறுவனத்தின் நிதி அதிகாரியாக இருந்த சோனல் ஸ்ரீவத்சவா தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம், தனது வர்த்தகத்தில் முக்கிய மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக, நிறுவனத்திலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அதன் வழியாக, கடந்த வருடம் வேதாந்தாவிலிருந்து வெளியேறிய அஜய் கோயல், தற்போது மீண்டும் இணைந்துள்ளார். அவரது விலகல் காரணமாக, பைஜூஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக, நிதின் கோலானி நியமிக்கப்படலாம் என பைஜூஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.