பைஜூஸ் நிறுவனம், புதிய சுற்று பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 1000 ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர். நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக இந்த பணி நீக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் கடன் வழங்குனர்கள் உடன் ஒரு பில்லியன் டாலர்கள் தொகைக்கான சட்டப் போராட்டம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ள போதும், புதிதாக பணி அமர்வுகளும் நிகழ்ந்துள்ளன. எனவே, நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சரிவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் முதல், பைஜூஸ் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு, தனது 5% ஊழியர்களை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.