பைஜூஸ் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது

October 13, 2022

இந்தியாவில் மிகவும் பிரபலமான கல்விசார் நிறுவனம் பைஜூஸ் ஆகும். இந்த நிறுவனம், தற்போது, தனது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 5% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில், தற்போதைய நிலையில், 50000 பேர் பணியாற்றி வருவதால், சுமார் 2500 பேர் பணி இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. புத்தாக்க நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கை என்று கூறப்படுகிறது. முன்னதாக ,மீஷோ, கார்ஸ் 24, அன் அகாடெமி போன்ற […]

இந்தியாவில் மிகவும் பிரபலமான கல்விசார் நிறுவனம் பைஜூஸ் ஆகும். இந்த நிறுவனம், தற்போது, தனது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 5% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில், தற்போதைய நிலையில், 50000 பேர் பணியாற்றி வருவதால், சுமார் 2500 பேர் பணி இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. புத்தாக்க நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கை என்று கூறப்படுகிறது. முன்னதாக ,மீஷோ, கார்ஸ் 24, அன் அகாடெமி போன்ற புத்தாக்க நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. அந்த வரிசையில், தற்போது, பைஜூஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. ஏற்கனவே, டாப்பர் மற்றும் வைட் ஹேட் ஜூனியர் போன்ற பைஜூஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனப் பணியாளர்கள் 600 பேர், இந்த வருடத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பைஜூஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாப்பர், மெரிட்னேஷன், ட்யூட்டர் விஸ்தா, ஸ்காலர், ஹாஷ் லர்ன் போன்ற அமைப்புகளை ஒரே வர்த்தகக் குடையின் கீழ் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் மற்றும் கிரேட் லேர்னிங் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தனி ஸ்தாபனங்களாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய பைஜூஸ் இந்தியா வர்த்தகத்தின் தலைமை செயல் அதிகாரி மிருணாள் மோகித், “நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்கு இந்த பணி நீக்க நடவடிக்கை துணை புரியும் என்று கருதுகிறோம். அத்துடன், வரும் மார்ச் 2023 க்குள் நிறுவனம் லாபகரமாக மாறும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில், பைஜூஸ் நிறுவனத்தின் தோற்றுநர் பைஜூ ரவீந்திரன், 2022 நிதி ஆண்டில், 10000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன், நிறுவனத்தில் மேலும் 10,000 ஆசிரியர்களை பணியமர்த்தி, மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை 20000 ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது, நிறுவனம் பெரும் இழப்பை பதிவு செய்து, பணி நீக்கத்தில் ஈடுபடுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பைஜூஸ் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டின் வருவாய் பதிவில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக, 18 மாதங்கள் தாமதமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் பதிவு செய்யப்பட்டது. அதன் படி, நிறுவனத்தின் வருவாய் 2280 கோடி ரூபாய் ஆகும். மேலும், கடந்த நிதியாண்டில், 4588 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் வருவாயை ஒப்பிடுகையில், இது 48% இழப்பாகும். எனவே, நிறுவனத்தை லாபகரமான பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில், நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலும், செலவுகளை குறைக்கும் அனைத்து வித தொழில் நுட்ப நடவடிக்கைகளிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாகவே இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu