பைட் டான்ஸ் லாபம் 79% உயர்வு - அலிபாபா, டென்சன்ட் நிறுவனங்களை விட உயர்வு

April 10, 2023

சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் கடந்த வருட லாபம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சன்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் அலிபாபா ஆகியவற்றை விட கூடுதலாக பதிவாகியுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முன்னான லாபம் 29% உயர்ந்து, 25 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். அதே வேளையில், டென்சன்ட் நிறுவனம் 23.9 பில்லியன் டாலர்கள் அளவில் […]

சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் கடந்த வருட லாபம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சன்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் அலிபாபா ஆகியவற்றை விட கூடுதலாக பதிவாகியுள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு முன்னான லாபம் 29% உயர்ந்து, 25 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். அதே வேளையில், டென்சன்ட் நிறுவனம் 23.9 பில்லியன் டாலர்கள் அளவில் லாபத்தை பதிவு செய்திருந்தது. அலிபாபா நிறுவனம் 22.7 பில்லியன் அளவில் லாபம் அடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த வார ப்ளூம்பர்க் அறிக்கை, பைட் டான்ஸ் நிறுவனத்தின் வருவாய் 30% க்கும் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டின் வருவாய், 80 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். டிக்டாக் செயலிக்கு பல்வேறு தடைகள் எழுந்த போதும், லாபம் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu