சிஏஏ: விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கம்

March 12, 2024

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்திய குடியரசு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நான்காண்டுகளாக இந்த திருத்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று […]

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்திய குடியரசு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நான்காண்டுகளாக இந்த திருத்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெரும்பாலான மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரளாவில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என கேரள முதல்வர் பினாரயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் சென்று மக்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu