ரூ.15,610 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் தங்கம் தென்னரசு

January 4, 2023

ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய […]

ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu