மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15000 டிரோன்களை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ட்ரோன்கள், அடுத்த 4 ஆண்டு காலத்திற்குள், படிப்படியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகளுக்கு, குத்தகை அடிப்படையில் ட்ரோன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு 1261 கோடி அளவில் முதலீடு செய்யவுள்ளது. அதன்படி, அடுத்த 4 ஆண்டுகளில் 15000 டிரோன்கள் கொடுக்கப்பட உள்ளன. ட்ரோன்களின் விலையில் 80% தொகையை மத்திய அரசு ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, ட்ரோன் இயக்கம் மற்றும் விவசாயத் துறையில் ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.














